மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் கடந்த புதன்கிழமை வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் கூட்டத்தில் கூறியதாவது. வருவாய்த் துறையில் ஏற்படும் தவறுகள் மூலம் அதிகமாக நிதி இழப்புகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். […]
