ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தேவண்னகவுண்டனூர் பகுதியில் வசிக்கும் செல்லப்பன்(70) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விபத்தில் எனது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று இரும்பு வளைவுடன் கூடிய ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வருகிறேன். உறவினர்கள் என்னை கைவிட்ட நிலையில், நடக்க முடியாததால் எனக்கு […]
