சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். அதன் பிறகு இவர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். இதில் இவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வழக்குகளும் சொத்துக்கள் முடக்கமும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதன்படி சசிகலாவால் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகளை வருமானவரித்துறைநர் முடக்கி விட்டனர். […]
