வருங்கால மனைவிக்கு முன்னாள் காதலியின் நகையைத் திருடி பரிசளித்த நபர் சிக்கிக் கொண்டார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆரஞ்சு சிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து இருப்பதை கண்டுபிடித்தார். அதன்பின் மன வருத்தத்தில் இருந்த அவர் காதலனின் வருங்கால மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்தப் பெண் நிச்சயதார்த்தத்தில் அணிந்திருந்த மோதிரத்தை போலவே தன்னிடமும் உள்ளது என்று எண்ணினார். […]
