கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னிலியோன் கடந்த 2012 ஆம் வருடம் முதல் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடித்த “வடகறி” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் எனும் தமிழ் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. இதில் சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். விஏயு தயாரித்திருக்கும் இப்படத்தினை ஆர்.யுவன் இயக்கியுள்ளார். […]
