பிரதமர் மோடியின் அரசாங்கம் பல ஊழல்களை செய்து வருகிறது என ரன்தீப் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திர தினத்துக்கு ஒரு நாளைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி “வெளிப்படையான வரிவிதிப்பு” என்ற புதிய தளத்தை தொடங்கினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “நரேந்திர மோடியின் அரசாங்கம் வரி பயங்கரவாதம் மற்றும் ரெய்டு ராஜ்ஜியம் இவற்றை நடத்தி வருகிறது. சென்ற 6 வருடங்களில் வரி விதிப்பு 129 விழுக்காடு அதிகரித்துள்ளது. […]
