இலங்கையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் 2 நாளாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் பெற கொழும்பு நகரில் இருக்கும் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் […]
