பிரபல இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதுபோன்ற சரித்திர படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்ட நிலையில், தமிழில் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சரிவர முன்வரவில்லை. ஏனெனில் சரித்திர படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்ததால் பெரும்பாலும் சரித்திர படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி உலக அளவில் 400 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. […]
