கிரிகோரியன் ஆண்டு : 133 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 134 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 232 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன. 1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[1] 1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் […]
வரலாற்றில் இன்று மே 13….!!
