கிரிகோரியன் ஆண்டு : 186 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 187 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 179 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர். 1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார். 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார். […]
வரலாற்றில் இன்று ஜூலை 5….!!
