கிரிகோரியன் ஆண்டு : 163 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 164 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 202 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். 1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது. 1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ்ம சாசுசெட்சில் […]
வரலாற்றில் இன்று ஜூன் 12….!!
