கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த வரம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 1ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதிபருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகமானதால் மேரிலேண்ட் மாகாணத்தில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. நான்கு நாட்கள் ராணுவ மருத்துவமனையில் இருந்த ட்ரம்ப் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். […]
