மதுரை அருகே கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், சித்தூர் கிராமத்தை சேர்ந்த கணபதி ராஜா என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார். […]
