வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் நுழைந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்பவருக்கும் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. நடராஜன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இதனால் பிரவீனா கணவர் வீட்டில் வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருப்பதால் […]
