விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கூனிமேடு குப்பத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவரது மகள் நந்தினி(22). இவரது மகளுக்கும் நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மரத்திலான கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், டிவி, 23 பவுன் தங்க நகை ஆகியவற்றை மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் நந்தினியை கூடுதலாக 7 பவுன் தங்க நகை அவரது வீட்டில் வாங்கி வர […]
