வயிற்றுவலியால் அவதிப்பட்ட மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொஞ்ச சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சக்திதேவி தேனி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திதேவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் […]
