கொடைக்கானலில் காலாவதியான உணவை சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் வத்தலகுண்டு ரோட்டில் “கோடை கொச்சின்” என்ற பெயரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த 26-ம் தேதி இரவு உணவு சாப்பிட்டார்கள். அதில் 10 பேருக்கு திடீரென்று நள்ளிரவில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். […]
