பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஒன்றியம் கிடாமங்கலம் மேலத் தெருவில் மகேந்திரன் சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மகேந்திரன் தனது தாத்தாவான பக்கிரிசாமி என்பவருடன் சேர்ந்து பருத்தி வயலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் சிறுவன் […]
