புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக வயலின் வாசித்து பல நாடுகளில் பணம் திரட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஸ்வப்பன் செட் (77 )மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர்.ஸ்வப்பன் செட் சிறந்த வயலின் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்வப்பன் சேட்டின் மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆகையால் பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிபோனாள். […]
