பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுதகலாசாரத்தை போற்றும் அடிப்படையிலான பாடல்களுக்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இது தவிர்த்து கொண்டாட்டம் எனும் பெயரில் பொதுஇடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை […]
