Categories
தேசிய செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு…. தமிழக அரசு மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும்…. டாக்டர் ராமதாஸ் கடிதம்….!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமகவினருக்கு ‘நாமின்றி சமூக நீதியில்லை… நிச்சயம் வெல்வோம் கலங்காதே!’ என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது… “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே. சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் வன்னியர்களின் 10.50% உள் இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற உங்கள் பலரின் ஏக்கத்தையும் நான் அறிவேன். பாட்டாளிகளாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுவது உங்களின் ஏக்கத்தைப் போக்கி, […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!

வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு ஒதுக்கீடு அரசாணையை தமிழ்நாடு அரசு. வெளியிட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் […]

Categories
மாநில செய்திகள்

இனி வன்னியர்கள் வாழ்வில்…” வசந்தம் வீசும்”… டாக்டர் ராமதாஸ் அறிக்கை…!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:- கடந்த 40 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு என்று தனி இடப்பங்கீடு தொடர்பான கோரிக்கைக்காக போராடியுள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து அழுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஆறு போராட்டங்களும் அபாரமானவை. தமிழகத்தில் வன்னிய தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

என் உயிர் களத்தில்தான் உள்ளது… ராமதாஸ் டுவீட்…!!!

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் போராட்ட களத்தில் தான் என் உயிரும் உள்ளமும் உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது. அதன் காரணமாக கல்வி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு…. டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம் …. பாமக அதிரடி முடிவு

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தேதி முதல், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி  மற்றும் வன்னியர் சங்கம் கூட்டு பொதுக்குழு கூட்டம்  மற்றும் இணையவழி கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அப்போது  தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி […]

Categories

Tech |