சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது “கொரோனா பேரிடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கக்கூடிய பொதுமக்களுக்கு சொத்துவரி உயர்வு பெரும் சுமையை ஏறபடுத்தி இருக்கிறது. இதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுவிவகாரத்தில் திமுக சார்பில் கோர்ட்டில் சரியாக வாதாடவில்லை. மேலும் முறையான தரவுகளை கோர்ட்டில் சமர்பிக்காத காரணத்தினாலேயே இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலஅபகரிப்புக்கு என தனிப்பிரிவு தொடங்கினார். இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் நிலஅபகரிப்புகள் தொடங்கிவிட்டது. […]
