கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் துணைத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலில் வகுப்பைச் சேர்ந்த திருமதி. இராஜேஸ்வரி இருந்து வருகிறார். கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது திருமதி. ராஜேஸ்வரி தரையில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. தெற்கு திட்டாய் […]
