கரடி தொழிலாளர்களை விரட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குண்டூர் காலனி மற்றும் வள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டூர் காலனியில் வசிக்கும் சில தொழிலாளர்கள் வேலைக்கு நடந்து சென்றனர். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த கரடி பொதுமக்களை விரட்டி சென்றது. இதனால் அவர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]
