வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் இருந்து கிராமப்புரத்திற்குள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அங்கு மான்கள், காட்டெருமைகள், குரங்குகள் ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அந்த வனப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள், நீர்நிலைகள் அனைத்தும் கடும் வெயிலின் காரணமாக வறண்டுபோய் காணப்படுகின்றது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளன. இந்நிலையில் காட்டை […]
