குடியிருப்புக்குள் புகுந்த யானை வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் திரும்பி செல்லும் காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு மாடு,கரடி என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது. சில நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வால்பாறை வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் விலங்குகள் […]
