ஈரோடு மாவட்டத்திலுள்ள புதூர்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் உறவினருடன் குன்றியிலிருந்து கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது திடீரென வந்த காட்டு யானை பழனிச்சாமியை தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. அவருடன் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் அஞ்சனைப் பிரிவு அருகே யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. அந்த வழியாக செல்பவர்கள் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். […]
