ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து யானைகள் நிற்கும். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துவதால் கரும்பு கட்டுகளை சாலையில் வீச வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]
