இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. எனவே கால்நடைகள் மோதலை தவிர்க்க வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மேலும் ரயில்களின் மீது ஆடு மற்றும் மாடுகள் குறுக்கிட்டு […]
