விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததால் வத்திராயிருப்பில் தாழ்வாக இருக்கும் பகுதியில் மழைநீர் ஆறு […]
