வத்தலகுண்டு அருகில் கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவில் நெஸ்புரூஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சதீஷ் ப்ளஸ்-2 முடித்து கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டகாமன்பட்டி அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலகுண்டு […]
