பாகிஸ்தானில் சுற்றுலா சென்ற குடும்பத்தினரின் வேன் ஆற்றில் கவிழ்ந்து ஓட்டுநர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலாஸ் என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராவல்பிண்டி என்ற நகரத்திற்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே ஒரு வேனை வாடகைக்கு எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 16 நபர்கள் நேற்று காலையில் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, கைபர் பக்துங்வா மாகாணத்தில் இருக்கும் பனிபா […]
