விஷ வண்டுகள் கடித்து காயமடைந்த 12 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராங்கியம் கிராமத்தில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய் கரையை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென புதர் செடிக்குள் இருந்து வந்த விஷ வண்டுகள் பெண்களை துரத்தி கடித்தது. இதனால் அவர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வண்டுகள் கடித்ததால் 12 பெண்கள் காயம் அடைந்தனர். […]
