திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, திண்டுக்கல் கிழக்கு […]
