வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது: “திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் மண்டல மாநாடு என்ன கூறியிருக்கலாம். மகனின் திருமணம் மூலம் கட்சி எழுச்சி பெற வேண்டும் என்று இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவிற்கு குறிப்பு எடுத்துச் செல்வது இல்லை. அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்பு எடுத்து வந்துள்ளேன். […]
