வணிகர்களுக்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையில் காவல் செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். கடைகளில் வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிப்பது, பொருள்களை சேதப் படுத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில் வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிப்பதற்காக புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் காவல் உதவி […]
