வட மாநில தொழிலாளி தண்ணீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செந்துகுமார் ராவத்(32) என்பவர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் செந்துகுமார் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கி கொண்டு விடுதியை விட்டு வெளியே சென்ற குமார் மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து குடிபோதையில் […]
