வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி பணம், செல்போனை பறிமுதல் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் வட மாநிலத்தில் வசிக்கும் சஜல்மண்டல் என்பவர் குடியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜல் மண்டல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சஜல் மண்டலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த பணம், […]
