ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகிறது. இதில் நேற்று அதிகளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கைகளில் சுமார் 200-க்கும் மேலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் இருக்கைகளில் அமர்ந்துகொண்ட வடமாநிலத்தவர்கள், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடமளிக்காமல் உட்கார்ந்து இருக்கின்றனர். இதன் காரணமாக எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை அவர்களோடு வாக்குவாதம் செய்தவாறு நின்றபடியே பயணித்து வந்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு […]
