வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக தேதியை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்கள். இது முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வடபழனி முருகர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடைபெற்று வருகின்றது, இதனை நேற்று மாலை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் மிக பழமை வாய்ந்த கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு […]
