பயங்கரவாத அமைப்பு ஒன்று கிராமக்களின் தலையை வெட்டி கொன்றுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாத குழு ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் கபோ டெல்கடோ என்ற மாகாணத்தின் நஞ்சபா கிராமத்தில் உள்ள ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தை தங்களுடைய கொலை செய்யும் களமாக மாற்றி, அதில் நஞ்சபா கிராம மக்களை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தலைகளை வெட்டிக் கொன்றுள்ளனர். மேலும் இந்த அட்டூழிய சம்பவத்தன்று இரவு அக்கிராம மக்களின் வீடுகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். […]
