பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் தலைமை தாங்கி உள்ளார். மேலும் போக்குவரத்து துறை மேலாளர்கள், பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் பேசியதாவது, பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு பேருந்துகள் […]
