மகாராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்து பலியாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரயில் கிளம்பும் போது அதனை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஓடும் ரயிலில் பலரும் ஏற முற்படுகின்றனர். இதனால் தவறி விழுந்து உயிர் இழக்க நேரிடுகின்றது. […]
