கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் விழா தனியார் கல்லூரியில் நடந்தது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து இருக்கிறார். இத்திரைபடத்தின் டிரைலரில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு வசனம் பரபரப்பாக இருந்தது. அதாவது அரசியலுக்கு வந்தால் பல்வேறு பொய் சொல்லவேண்டும் என பேசி இருந்தார். இந்நிலையில் இப்பட நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டபோது சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை சுட்டிக் காட்டிப் பேசினார். […]
