ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் ரோடு பகுதியில் கிருஷ்ணாரெட்டி (85) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலுள்ள யூனியன் பாங்க் கிளையின் லாக்கர் அறைக்கு சென்றிருந்தார். இதையடுத்து அவர் லாக்கர் அறையில் இருந்ததை பார்க்காமல் ஊழியர், அதைப்பூட்டி விட்டு வங்கி ஷட்டரையும் கீழே இறக்கி விட்டார். இதன் காரணமாக அவர் அந்த அறைக்குள்ளே இரவு முழுதும் சிக்கித் தவித்தார். இந்நிலையில் வங்கிக்கு சென்ற கிருஷ்ணாரெட்டி வீடு திரும்பாததைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]
