நாட்டில் சமீபகாலமாக வங்கி மோசடி களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வங்கி மோசடிகள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 -2022 ஆம் நிதியாண்டில் தனியார் வங்கிகள் அதிக அளவிலான வங்கி மோசடிகளை பதிவு செய்துள்ளன. அதாவது தனியார் வங்கிகளில் 5,334 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 3,078 வங்கி மோசடிகளும் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகின்றது. அதனைப்போலவே வெளிநாட்டு வங்கிகளிலும் 494 […]
