இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரித்தபின் பல்வேறு வங்கிகள் தங்களது கடன்களை விலையுயர்ந்ததாக மாற்றியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும் அதன் கடன்களை விலை உயர்த்தி இருக்கிறது. அதன்பின் பல்வேறு வங்கிகளும் கடன்களை விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பணம்வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென ரிசர்வ் வங்கியானது கடந்த வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை 0.50 % அதிகரித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளது. இந்த வருடம் மே மாதத்திலிருந்து ரிசர்வ்வங்கி ரெப்போ விகிதத்தை 4 […]
