வங்கி ஊழியரின் வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் பாரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான மனைவி பிரவிணா என்பவர் இருக்கிறார். இவர் தாய்வீடான அரியபாடி கிராமத்திற்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் இருந்த பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க […]
