திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுத்திட வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், வாக்காளர்களுக்கு தேர்தலையொட்டி பணம் வழங்கப்படுவதை தவிர்க்க வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதில் அவர் பேசுகையில், கிளை வங்கிகளுக்கிடையே வாகனங்களில் பணம் கொண்டு செல்ல முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்புவது அவசியம். வங்கிகள் நாள்தோறும் ஏ.டி.எம் இயந்திரங்களில் […]
