புகழ்பெற்ற பாடகி நிர்மலா மிஸ்ரா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 81. பெங்கால் மற்றும் ஒடியா மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். அவர் ஒடியா இசைக்கு வழங்கிய வாழ்நாள் பங்களிப்புக்காக அவருக்கு சங்கீத் சுதாகர் பாலக்ருஷ்ண தாஸ் விருது வழங்கப்பட்டது. இவரது மறைவிற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
